உள்துறை அமைச்சகம்
கர்நாடக மாநிலம் பிதாரில் உள்ள கோரட்டா மைதானத்தில் கோரட்டா தியாகிகள் நினைவகம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் நினைவகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்து 103 அடி உயர மூவர்ணக்கொடியை ஏற்றினார்
Posted On:
26 MAR 2023 6:46PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் பிதாரில் உள்ள கோரட்டா மைதானத்தில் கோரட்டா தியாகிகள் நினைவகம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திறந்து வைத்து 103 அடி உயர மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு பி.எஸ். எடியூரப்பா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்திய திரு அமித் ஷா, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் இல்லாவிட்டால், ஹைதராபாத் மற்றும் பிதார் ஒருபோதும் சுதந்திரமாகி இருக்காது என்று கூறினார். சர்தார் படேலின் இந்த நினைவுச்சின்னம், ஹைதராபாத்-கர்நாடகா-மராத்வாடா மக்களை நிஜாமின் கொடூர ஆட்சியிலிருந்து விடுவித்ததன் அடையாளமாகும். 1948 ஆம் ஆண்டு இந்த இடத்தில் இரண்டரை அடி மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக நூற்றுக்கணக்கான மக்களைக நிஜாம் கொன்றார். இதே இடத்தில் இன்று 103 அடி உயரமுள்ள மூவர்ணக் கொடியை ஏற்றும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது என்றும் திரு ஷா கூறினார்.
ஹைதராபாத் விடுதலை தினத்தையொட்டி, 2014 செப்டம்பர் 14 அன்று, நாடு முழுவதும் பல நூறு ஆண்டுகளாக கோராட்டா தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டியதாகக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர், இன்று அதைத் திறந்து வைக்கும் வாய்ப்பைப் பெறுவது அதிர்ஷ்டம் என்றார். கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து வரும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மகத்தான தியாகிகளின் கதை சொல்லும் வகையில், 50 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட நினைவிடம் மற்றும் ஒளி ஒலிக் காட்சி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இன்றும் ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட தெலுங்கானா அரசு தயங்குவதாகவும், ஆனால் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஐதராபாத் விடுதலை தினத்தை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் திரு அமித் ஷா கூறினார். நினைவிடம் கட்டப்பட்ட பிறகு, அடுத்த ஆண்டு ஹைதராபாத் விடுதலை தின விழா கோரட்டா கிராமத்திலேயே நடத்தப்படும் என்றார்.
திரு எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றதும், அடிமைத்தனத்தின் அடையாளமான 'ஹைதராபாத்-கர்நாடகா' என்ற பெயரை 'கல்யாண-கர்நாடகா' என்று மாற்றினார். கல்யாண் கர்நாடகா வளர்ச்சிக்காக ரூ.3000 கோடி கொடுத்த அரசு, இந்த பட்ஜெட்டில் ரூ.5000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் விவசாயிகள் நலன் திட்டத்தின் மூலம், மாநிலத்தின் 54 லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.10,000 நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு, கழிவறை, மின்சாரம், ஒவ்வொரு ஏழைக்கும் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை என, பல வளர்ச்சிப் பணிகளை அரசு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
***
SRI/PKV/DL
(Release ID: 1910971)
Visitor Counter : 210