இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி-20 நாடுகளின் தலைமை அறிவியல் ஆலோசகர்கள் கூட்டம் உத்தரகாண்டின் ராம்நகரில் 2023 மார்ச் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 24 MAR 2023 3:14PM by PIB Chennai

ஜி-20 தலைமை அறிவியல் ஆலோசகர்கள் கூட்டம் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி தில்லியில் இன்று நடைபெற்றது. ஜி-20 நாடுகளின் தலைமை அறிவியல் ஆலோசகர்கள் கூட்டம் உத்தரகாண்டின் ராம்நகரில் 2023 மார்ச் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக இன்றைய அறிமுக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் திரு அஜய்குமார் சூட் கூறுகையில், தலைமை அறிவியல் ஆலோசகர், அரசின் நிர்வாக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.  உள்ளடக்கிய உலகளாவிய  அறிவியல் ஆலோசனை என்ற செயல் திட்டத்துடன் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜி-20 தலைமை அறிவியல் ஆலோசகர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் செயலாளர் டாக்டர் பர்வீந்தர் மைனி கூறுகையில், சுகாதாரம், நோய் தடுப்பு, பெருந்தொற்றுக்கான தயார் நிலை, பல்லுயிர் பெருக்கம், அனைவருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பலன்களை கிடைக்க செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக இந்த 3 நாள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றார்.

***

SM/PLM/AG/KRS


(रिलीज़ आईडी: 1910471) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu