பாதுகாப்பு அமைச்சகம்
முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதாரத்திட்டம்
प्रविष्टि तिथि:
24 MAR 2023 2:45PM by PIB Chennai
கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்புத் திட்டம் மூலம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரைச்சார்ந்து இருப்பவர்களுக்கு தரமான மருத்துவ வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 30 மண்டல மையங்கள் மற்றும் 433 பன்னோக்கு கிளீனிக்குகள் மூலம் மொத்தம் 55 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் மூலம் முன்னாள் ராணுவத்தினருக்கு செலவில்லா மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத்திட்டத்தில் பாதுகாப்புத் துறையின் கணக்குக் கட்டுபாட்டாளரிடமிருந்து ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவத்தினருக்கும், மாற்றுத்திறனாளிகள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் இந்த சுகாதார வசதியை பெறுவதற்கு தகுதியுடைவர்கள். கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் உறுப்பினராவதற்கு ராணுவப் பாதுகாப்பு கார்ப்பரேஷன், இந்திய கடலோரக் காவல்படையின் சீருடைப் பணியாளர்கள், ராணுவ செவிலியர் சேவைப் பிரிவினர், முழுநேர என்சிசி அதிகாரிகள், ராணுவ தபால் சேவைப் பிரிவினர், அசாம் துப்பாக்கிப்படை ஓய்வூதியதாரர்கள், இரண்டாம் உலகப்போரின் படைவீர்ர்கள், அவசர கால நியமன அதிகாரிகள் ஆகியோர் தகுதியுடைவர்களாவர்.
கடந்த 3 ஆண்டுகளில் 3,35,62,481 பேர் முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். இதில் 2020-ம் ஆண்டு 58,80,023 பேரும், 2021-ம் ஆண்டு 1,23,81,583 பேரும், 2022-ம் ஆண்டு 1, 53,00,875 பேரும் பயனடைந்துள்ளனர்.
2020-21-ம் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்காக ரூ.4579.63 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ.4864.66 கோடியும், 2022-23-ம் நிதியாண்டில் ரூ.4897.64 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
இந்தத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 167 மருத்துவமனைகளிலும், புதுச்சேரியில் 4 மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் படேல் அளித்துள்ள பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
***
SM/ES/RS/KRS
(रिलीज़ आईडी: 1910428)
आगंतुक पटल : 177