வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
உலக தண்ணீர் தினம் 2023- சிறிய நகரங்களில் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையை துரிதப்படுத்துவதில் கவனம்
Posted On:
22 MAR 2023 6:08PM by PIB Chennai
உலக தண்ணீர் தினத்தையொட்டி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில் சிறிய நகரங்களில் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. நீர் ஆதாரங்களில் சிறந்த மேலாண்மையை உறுதி செய்வதற்காக முதலீடு, புதுமை கண்டுபிடிப்புகள், நிர்வாகம் ஆகியவற்றை அதிகரிப்பதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டும் துரித மாற்றம் என்ற கருப்பொருளின் ஒரு பகுதியாக இந்த இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தூர், சூரத், புதுதில்லி பஞ்சாயத்து கவுன்சில், திருப்பதி, சண்டிகர், நவி மும்பை, விஜயவாடா, ஹைதராபாத், பெருநகர விசாகப்பட்டினம், காரத், பஞ்ச்கனி, போபால், பாரமதி, மைசூர் ஆகிய 14 நகரங்களில் நீடித்த தூய்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையின் சிறந்த தரங்களை அடைந்துள்ளன. இந்த நகரங்களில் பயன்படுத்தப்பட்ட நீரை சேகரித்து வைப்பதோடு, இரண்டாவது மற்றும் மூன்றாவது சுத்திகரிப்புக்கு பின் நீர் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
***
MS/IR/AG/KRS
(Release ID: 1909684)
Visitor Counter : 159