குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உகாதி, குடி பத்வா, சைத்ரா சுக்லாடி, செட்டி சந்த், நவ்ரே மற்றும் சஜிபு சிரோபா பண்டிகைகளையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
21 MAR 2023 5:40PM by PIB Chennai
உகாதி, குடி பத்வா, சைத்ரா சுக்லாடி, செட்டி சந்த், நவ்ரே மற்றும் சஜிபு சிரோபா ஆகிய பல்வேறு மாநிலங்களின் புத்தாண்டு பண்டிகைகளையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
உகாதி, குடி பத்வா, சைத்ரா சுக்லாடி, செட்டி சந்த், நவ்ரே மற்றும் சஜிபு சிரோபா பண்டிகைகளையொட்டி அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள்.
பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் பாரம்பரியமான புத்தாண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகிழ்ச்சியையும், ஒற்றுமை உணர்வையும் நாடு முழுவதும் கொண்டு சேர்க்கிறது. இது நமது பலதரப்பட்ட கலாச்சாரங்களின் வளமையையும், வளமைக்கு உதாரணமாகவும், தனித்துவமிக்கதாகவும் விளங்குகிறது. இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, வளம் ஏற்படுத்தட்டும்.
***
SM/GS/RJ/KRS
(रिलीज़ आईडी: 1909303)
आगंतुक पटल : 204