சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டின் தொழுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை

Posted On: 21 MAR 2023 2:55PM by PIB Chennai

தொழுநோய் குறித்த தேசிய உத்தி திட்டம் மற்றும் செயல் திட்டத்தை மத்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கியது. மூன்றாண்டுகளுக்குள் அதாவது 2027 ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் பரவுவதை அடியோடு ஒழிப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

தேசிய அளவில் இந்த இலக்கை எட்டும் வகையில் பின்னர், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் ஏராளமான முன் முயற்சிகளை எடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி, இந்தியா தொழுநோய் ஒழிப்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பத்தாயிரத்து ஒன்றுக்கும் கீழ் என்ற அளவை 2005 ஆம் ஆண்டை எட்டியுள்ளது.

2023 ஜனவரி மாதம் வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் பத்தாயிரம் பேருக்கு 0.3 என்ற அளவிலும், புதுச்சேரியில் 0.1 என்ற அளவிலும்  தொழுநோய் பாதிப்பு விகிதம் உள்ளது.

மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

***

SM/PKV/MA/RJ



(Release ID: 1909262) Visitor Counter : 184


Read this release in: English , Marathi , Manipuri , Telugu