சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தனியார் மருத்துவமனைகளில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னெடுப்பு
Posted On:
21 MAR 2023 2:55PM by PIB Chennai
மருத்துவமனை நிர்மாணம் பதிவு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2010 மற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பின்வரும் சேவைகள் வழங்கப்பட வேண்டியது கட்டாயம்
- வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் கட்டண விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளிலும் இந்த விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- வழங்கப்படும் மருத்துவ சேவைக்கு ஆகும் செலவீனத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இடம்பெற வேண்டும்.
2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் அளவிலான குடும்ப மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 60 கோடி பயனாளிகள் இணைந்துள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் பிரமரின் ஜன் ஆரோக்கிய திட்டம் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, 27 குறிப்பிட்ட மருத்துவ சேவைகள் உட்பட 1949 மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும்.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையைமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
***
SM/ES/RS/RJ
(Release ID: 1909256)
Visitor Counter : 198