விவசாயத்துறை அமைச்சகம்
உலகளவில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ஐ பிரபலப்படுத்துவதில் பங்களிப்பு செய்யுமாறு தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அறிவுறுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
20 MAR 2023 4:45PM by PIB Chennai
உலகளவில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023-ஐ பிரபலப்படுத்துவதில் பங்களிப்பு செய்யுமாறு தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பை மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அறிவுறுத்தியுள்ளார்.
திரு தோமரின் வழிகாட்டுதலின் படி, சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் முன்னெடுப்பிற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்துடன், தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, சிறுதானியங்கள் தொடர்புடைய ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு சந்தை இணைப்பு, தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு சில்லரை விற்பனையகங்களில் சிறுதானியங்களுக்கென தனிப்பகுதியை உருவாக்குதல், சிறுதானியங்கள் விற்பனை இயந்திரங்களை பொருத்துதல் ஆகியவற்றை தில்லி முழுவதும் ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
***
SM/IR/AG/KRS
(रिलीज़ आईडी: 1908899)
आगंतुक पटल : 207