சுரங்கங்கள் அமைச்சகம்
சட்டவிரோத சுரங்கப்பணிகளை தடுப்பதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவுகள்
Posted On:
20 MAR 2023 5:25PM by PIB Chennai
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957 இன் பிரிவு 23சி, சட்டவிரோத சுரங்கத்தைத் தடுப்பதற்கான விதிகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. மாநில அரசுகள், அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிப்பதன் மூலம், சட்டவிரோத சுரங்கப்பணிகள், போக்குவரத்து கனிம வளங்களை சேமித்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான விதிகளை உருவாக்கலாம்.
நடப்பு நிதியாண்டு 2022-23-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 4495 சட்டவிரோத சுரங்க வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 743.12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
***
SRI/IR/AG/KRS
(Release ID: 1908884)