கலாசாரத்துறை அமைச்சகம்

சிவில் 20 இந்தியா 2023 தொடக்க கருத்தரங்கின் முதலாவது முழு அமர்வு ‘சுற்றுச்சூழலுடன் இணைந்த சமமான வளர்ச்சி’ என்ற கருப்பொருளில் நடைபெற்றது

Posted On: 20 MAR 2023 2:44PM by PIB Chennai

சிவில் 20 இந்தியா 2023 தொடக்க கருத்தரங்கின் முதலாவது முழு அமர்வு நாக்பூரில் இன்று நடைபெற்றது. இந்த அமர்வு சுற்றுச்சூழலுடன் இணைந்த சமமான வளர்ச்சி என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்பட்டது. முன்னாள் தலைமை தகவல் ஆணையர் திரு.சத்யானந்த் மிஷ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் சுகாதாரம், நதிகள் மீட்பு மற்றும் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கருத்தரங்கில் பேசிய சத்யானந்த் மிஷ்ரா, ஜி20 பணிக்குழு கூட்டங்கள் அனைத்திலும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை சார்ந்துள்ள மனித வாழ்வியல் முறை என்ற கருப்பொருளில் விவாதம் நடைபெற்று வருவதாகவும், இதே போன்ற கொள்கையில் மாதா அமிர்தானந்தமயி-யின் எண்ணங்களும் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் பேசிய வாசுகி கல்யாணசுந்தரம், நதிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். நதிகள் மாசுபடுத்தப்படுவது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், நீர் மேலாண்மையில் குறைந்த அளவில் நீரை பயன்படுத்துதல், மறுசுழற்சி முறையில் பாதுகாத்தல் உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்களையும் பட்டியலிட்டார்.

•••

TV/ES/RR/KRS



(Release ID: 1908799) Visitor Counter : 165