கலாசாரத்துறை அமைச்சகம்
சிவில்-20 இந்தியா 2023 பணிக்குழு கூட்டம் நாக்பூரில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
20 MAR 2023 1:02PM by PIB Chennai
சிவில்-20 இந்தியா 2023 பணிக்குழு கூட்டம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சர்வதேச ஆலோசனைக் கமிட்டி (ஐஏசி) உறுப்பினர்கள், வழிகாட்டும் கமிட்டி உறுப்பினர்கள், சிவில்-20 இந்தியா 2023 பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிவில்-20 துணைத் தலைவர் திரு. வினய் சகஸ்ரபுத் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் வழிகாட்டு கமிட்டி உறுப்பினர்கள், அமிர்த விஷ்வ வித்யாபீடத் தலைவர் ஸ்வாமி அமிர்தஸ்வருபானந்தா, சிவில்-20 இந்தியா 2023 தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற இந்தியத் தூதர் விஜய் கே.நம்பியார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்வாமி அமிர்தஸ்வருபானந்தா, காலம், முயற்சி மற்றும் ஆன்மீகம் ஆகியவை வாழ்வின் முக்கியமான அத்தியாவசியக் காரணிகள் என்று குறிப்பிட்டார். பொதுப் பிரச்சனைக்கு பாமர மக்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தீர்வு காண வேண்டியது அரசின் கடமை என்றும் அமிர்தஸ்வருபானந்தா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1908727
***
IR/ES/RR/KRS
(रिलीज़ आईडी: 1908787)
आगंतुक पटल : 240