ரெயில்வே அமைச்சகம்
சத்தீஷ்கரின் அகல ரயில்பாதை கட்டமைப்பு 100% மின்மயமாக்கப்பட்டுள்ளது
Posted On:
18 MAR 2023 4:46PM by PIB Chennai
2030 ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியேற்றமே இல்லை என்ற இலக்கை நிர்ணயிக்கும் வகையில், இந்திய ரயில்வேயில் சத்தீஷ்கரின் தற்போதைய அகலப்பாதை கட்டமைப்பு 100% மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வேயின் 100% மின்மயமாக்கப்பட்ட வலைப்பின்னல் என்ற கொள்கையுடன் ஒத்திசைந்து, மின்மயமாக்கலுடன் புதிய அகலப்பாதை வலைப்பின்னல் அனுமதிக்கப்படும்.
சத்தீஷ்கரின் பிலாஸ்பூர் ரயில்வேயில் ஒரு முக்கியமான சந்திப்பு. இது மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது. சத்தீஷ்கர் மாநிலம் நாட்டிலேயே அதிக சரக்குகள் ஏற்றும் மாநிலமாக உள்ளது. ரயில்வேக்கு குறிப்பிடத்தக்க வருவாய் இங்கிருந்து கிடைக்கிறது. சத்தீஷ்கரிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்குக் கனிமங்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு செல்வதில் ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1908355
****
AD/SMB/KPG
(Release ID: 1908465)
Visitor Counter : 148