குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மூன்றாவது சர்வதேச சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மாநாடு புது தில்லியில் மார்ச் 19 முதல் 21 வரை நடைபெறும்

Posted On: 18 MAR 2023 6:27PM by PIB Chennai

3வது சர்வதேச சிறு,குறு தொழில்நிறுவனங்கள்  மாநாட்டுக்கு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்  அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம், இந்திய SME மன்றம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. முக்கிய பங்குதாரர் மாநிலமாக  மத்தியப் பிரதேசமும்,  உத்தரப்பிரதேச மாநிலம் இணை  பங்குதாரராகவும் இதில் பங்கேற்கின்றன. இந்த மாநாடு மார்ச் 19 முதல் 21  வரை புது தில்லியில் நடைபெறுகிறது.

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு  நாராயண் ரானே, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா, வெளியுறவு துறை இணையமைச்சர்  டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், மற்றும் மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆண்டு மாநாட்டில், 1500-க்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்கப்படுகிறது. தூய்மை தொழில்நுட்பம் மற்றும் பசுமை எரிசக்தி, உற்பத்தி, சேவைத் துறை, வேளாண் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் செயல்பாட்டுத்துறை ஆகியவற்றில் இந்த ஆண்டு மாநாடு முக்கிய கவனம் செலுத்தும்.

MSME-க்களுக்கான நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கும், உலகளாவிய மதிப்பு சங்கிலிகளில் அவற்றை ஈடுபடுத்துவதற்கும் ஏற்ற வகையில் பல குழு விவாதங்கள் இதில் இடம்பெறும்.

----

AD/PKV/KPG

 (Release ID: 1908430) Visitor Counter : 76


Read this release in: Telugu , English , Urdu , Hindi