மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோமாரி நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 24 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

Posted On: 17 MAR 2023 5:25PM by PIB Chennai

கோமாரி நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படும் நடைமுறையின் கீழ் கோமாரி நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 24 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் முக்கிய அம்சங்கள்: கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், நிர்வாகத்தின் இடைவிடாத முயற்சிகள் மற்றும் மிக முக்கியமாக கால்நடை உரிமையாளர்களின் ஆதரவின் காரணமாக இந்த மைல்கல் சாத்தியமானது.

இந்தத் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசால் நிதியளிக்கப்படுவதன் மூலம் கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குகிறது.

கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட பல்வேறு தகவல், கல்வி, தகவல் தொடர்பு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சேவையைப் பெற அருகில் உள்ள கால்நடை சுகாதாரப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கால்நடை சுகாதாரப் பணியாளர்கள்துணை கால்நடை மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுகிறது.

***

AP/GS/AG/KRS


(Release ID: 1908149) Visitor Counter : 131


Read this release in: English , Urdu , Hindi , Odia , Telugu