மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்தியாவின்மின்னணுவியல் சாதனங்கள் உற்பத்தித் திறனை 2025-26-ம் ஆண்டுக்கள் ரூ.24 லட்சம் கோடிஅளவுக்கு அதிகரிக்க இலக்கு: மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திர சேகர்

Posted On: 17 MAR 2023 5:41PM by PIB Chennai

இந்தியாவின் மின்னணுவியல் சாதனங்கள் உற்பத்தித் திறனை 2025-26-ம் ஆண்டுக்கள் ரூ.24 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை  இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கை 10லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கான புதிய  இந்தியா என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தொடர்  கலந்துரையாடல்களை திரு ராஜீவ் சந்திரசேகர் நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பெங்களூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ராஜேந்திரா வெள்ளி விழா தொழில்நுட்ப நிறுவனத்தில் 1500 மாணவர்கள் மத்தியில் இன்று அவர் உரையாற்றினார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014-ம் ஆண்டுக்கு  பிறகு நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார். தற்போது நாட்டில் 90 ஆயிரம் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். திறன் மேம்பாடு, புதுமைக் கண்டுபிடிப்புகள், தொழில் முனைவு வாய்ப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் அவர்  பதில் அளித்தார்.  

***

SRI/PLM/RS/KRS



(Release ID: 1908146) Visitor Counter : 115


Read this release in: Marathi , English , Urdu