பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆடிட்ஆன்லைன் செயலி திட்டத்திற்கு சர்வதேச விருது

प्रविष्टि तिथि: 17 MAR 2023 11:27AM by PIB Chennai

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும் அரசின் தொழில்நுட்ப கூட்டு நிறுவனமாக இயங்கும் தேசிய தகவலியல் மையமும் அதன் ஆடிட்ஆன்லைன் எனும் செயலியும் திட்டத்திற்கான உயரிய விருதை வென்றுள்ளன. அனைத்து பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளிலும் இணைய வழியாக தணிக்கை பணிகளை மேற்கொள்ளும் ‘வசதி பிரிவில்’ ஜெனிவாவில் உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக உச்சிமாநாட்டில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இந்த விருதைப் பெற்ற குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆடிட்ஆன்லைன்: அரசு நிர்வாகத்தில் தணிக்கை வசதித் திட்டம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலிகள்: மின்னணு அரசு என்பதன் சி-7 பிரிவின் கீழ் இதற்கான விண்ணப்பம் ஜெனிவாவின்  சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தில் நடைபெற்ற 12-வது உலக உச்சிமாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களுக்கு பிறகு குறிப்பிட்ட பிரிவில் அதிக வாக்குகளைப் பெற்று சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக உச்சிமாநாடு  விருது 2023-ஐ ஆடிட் ஆன்லைன் வென்றுள்ளது.

***

(Release ID: 1907878)

SRI/RB/KRS

 


(रिलीज़ आईडी: 1907937) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu