சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்களின் பாதுகாப்பு
प्रविष्टि तिथि:
16 MAR 2023 2:17PM by PIB Chennai
பிற தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் சாதனங்களைப் போலவே, மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்களும், இணைய தள தாக்குதல் தொடர்பான சம்பவங்களின் மூலம் பாதிக்கப்படக் கூடியவையாகும். இந்தியாவில் இணையதள தாக்குதல் சம்பவங்களை கண்காணித்து தடுப்பதற்கான அமைப்பான இந்திய கணினி அவசர நடவடிக்கைக் குழு, (சிஇஆர்டி-இன்) மின்சார வாகன மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் செயலிகளும் இணைய தள தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடும் என்று கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளது.
இணைய தள தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பாக அரசு விழிப்புணர்வுடன் இருப்பதுடன், அவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிஇஆர்டி-இன், குழு இணைய தள நெருக்கடி மேலாண்மைத் திட்டத்தை வகுத்து அதை அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள் பயன்படுத்த வகை செய்துள்ளது.
சிஇஆர்டி-இன் குழு வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில், 2022-ம் ஆண்டில் இணைய தாக்குதல் தொடர்பாக 13,91,457 சம்பவங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
****
SRI/PLM/RS/KRS
(रिलीज़ आईडी: 1907688)
आगंतुक पटल : 179