குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
மகளிர் சொந்தமாக நடத்தும் நிறுவனங்கள்
Posted On:
16 MAR 2023 2:19PM by PIB Chennai
உத்யம் பதிவு தள தகவல்களின் அடிப்படையில், 13.03.2023 வரை நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 1,47,50,018 ஆகும். இவற்றில் மகளிரால் நடத்தப்படும் நிறுவனங்கள் 27,75,390 ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 15,33,592 ஆகும். இதில் மகளிரால் நடத்தப்படும் நிறுவனங்கள் 3,84, 866 ஆகும்.
கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மகளிரால் நடத்தப்படும் 3,40,013 நிறுவனங்கள் ரூ. 14,247.24 கோடி கடன்களை பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டில் இயங்கும் 14,786 மகளிர் நிறுவனங்களுக்கு ரூ.1,054.89 கோடி கடன் உத்தரவாதத் தொகைக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 2022-23ம் நிதியாண்டில் பிப்ரவரி 28ம் தேதி வரை மகளிரால் நடத்தப்படும் 26,241 நிறுவனங்களும் மானியம் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2, 458 நிறுவனங்கள் அடங்கும்.
இந்தத் தவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.
***
SRI/PLM/RS/KRS
(Release ID: 1907658)
Visitor Counter : 138