குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ஏப்ரல் முதல் நூல் நூற்பு கூலி உயர்வு: மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங்
Posted On:
16 MAR 2023 2:16PM by PIB Chennai
கதர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் மூலம் மத்திய குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
கதர் தொழில்துறையைச் சேர்ந்த பருத்தி, கம்பளி, பாலிவஸ்த்ரா ஆகியவற்றுக்கு மாற்றியமைக்கப்பட்ட சந்தை மேம்பாட்டு உதவி திட்டதில் 35 சதவீதம் அளவிற்கு ஊக்கத்தொகை கதர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 30 சதவீதம் ஊக்கத்தொகை பட்டு உற்பத்திக்கு அளிக்கப்படுகிறது.
தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் பணிச்சூழலை எளிதாக்கும் வகையில், கூடாரம் கட்டுவதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு நூல் சுற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நூற்பு கூலி ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தி கதர், பருத்தி கம்பளி, பாலிவஸ்த்ரா நூற்புகளுக்கான கூலி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 1.4.2023 முதல் அமலுக்கு வருகிறது.
இத்தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
SRI/IR/RJ/KRS
(Release ID: 1907643)