சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பொதுச் சாலைப் போக்குவரத்தில் மகளிர் பாதுகாப்பு
Posted On:
16 MAR 2023 2:15PM by PIB Chennai
வாகன தொழில் துறை தர நிர்ணய விதி 140-க்கு ஏற்ப, (ஏஐஎஸ்140) மேம்பாடு, தனி பயணாக்கம், செயலாக்கம் மற்றும் மாநில வாரியான வாகனப் பாதுகாப்புத் தள திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வடிவமைத்துள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 15, ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி, ஏஐஎஸ்-140 தர நிலைகளுக்கேற்ப மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட, அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டம் அவ்வப்போது நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இதனுடன் நிர்பயா திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிற திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அந்த கூட்டங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.
வாகன கண்காணிப்பு தளம் தொடர்பான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தேர்வு நடைமுறைகளை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி மாநில அரசுகள் மேற்கொள்ளும்.
இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
***
SRI/PLM/RS/KRS
(Release ID: 1907636)