விவசாயத்துறை அமைச்சகம்

பெங்களூருவில் “வேளாண் பல்கலைக்கழக விழாவை”த் தொடங்கிவைத்து பேசிய மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், இந்தியாவின் வளர்ச்சிக்கு இளையோர் சக்தி உதவும் என்றார்

Posted On: 15 MAR 2023 5:47PM by PIB Chennai

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, பெருமளவு மக்கள் தொகையையும், அதிலும் சிறப்பாக மக்கள் தொகையில் 60 சதவீதத்தினரை இளைஞர்களாகவும் கொண்டுள்ளது என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வேளாண் பல்கலைக்கழக விழாவைத் அக்ரியுனிஃபெஸ்ட் தொடங்கிவைத்து பேசிய அவர், இந்த இரண்டு சக்திகளும் இணையும்போது, இந்தியா எந்தவித சவாலையும் சந்திக்க முடியும் என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடி அடுத்த 25 ஆண்டுகளை  அமிர்த காலம் என அறிவித்துள்ள நிலையில், நாட்டின் இளையோர் சக்தியை முறைப்படி பயன்படுத்தினால், 2047-ம் ஆண்டு வாக்கில் நமது நாடு நிச்சயம் வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் ஒத்துழைப்புடன் பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள “அக்ரியுனிஃபெஸ்ட்” எனும் 5 நாள் கலாச்சார நிகழ்வின் தொடக்க விழாவில், மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று பங்கேற்றார். இந்த விழாவில், 60 மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள்/  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்/மத்திய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 2500க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 18 நிகழ்வுகளில் தங்களின் திறனை வெளிப்படுத்துவார்கள். இசை, நடனம், இலக்கியம், நாடகம், நுண்கலைகள் ஆகிய 5 பிரிவுகளில் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்ற திரு தோமர் பேசுகையில், இந்த சகாப்தம் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை சுட்டிக்காட்டினார். வேளாண்மையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வரும் இன்றைய தேவையாகும் என்று அவர் குறிப்பிட்டார். வேளாண் துறையில் தரகர்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதி சிறந்த உதாரணமாகும் என்று கூறிய அமைச்சர், இது வரை நேரடிப் பயன் பறிமாற்ற திட்டத்தின் கீழ் இடைத்தரகர்கள் இல்லாமல், ரூ.2.40 லட்சம் கோடி விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

இந்த நிகழ்வில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரண்ட்லாஜெ, கர்நாடக வேளாண் துறை அமைச்சர் திரு பி சி பாட்டீல், ஐசிஏஆர் துணைத் தலைமை இயக்குநர் (கல்வி) டாக்டர் ஆர் சி அகர்வால், துணைவேந்தர் டாக்டர் சுரேஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

***

AD/SMB/RS/KPG



(Release ID: 1907325) Visitor Counter : 99


Read this release in: English , Urdu , Punjabi , Telugu