சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் சிறுபான்மை சமுதாயத்தினரின் சமூக பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளிக்க அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கான நடவடிக்கைகள்

Posted On: 15 MAR 2023 4:16PM by PIB Chennai

நாடு முழுவதும் சிறுபான்மை சமுதாயத்தினரின் சமூக பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளித்தலுக்காக அவர்களுடைய குழந்தைகளின்  இடைநிற்றலை குறைத்து கல்வி அளிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ஜனவரி 2008-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2021-2022-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. 11, 12-ம் வகுப்பு மற்றும் உயர் வகுப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டம் நவம்பர் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பிரிவு படிப்புகளுக்கான தகுதியுடன் கூடிய செயல்பாட்டு கல்வி உதவித்தொகை 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இத்திட்டங்களின் மூலம் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பயனடைந்தனர்.  இதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

இத்தகவலை மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

 

***

AD/IR/RJ/KPG


(Release ID: 1907266)
Read this release in: English , Urdu , Marathi , Telugu