பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2021-ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 31 வரை மேற்கொள்ளப்பட்ட ஒரு மாத கால தூய்மை இயக்கத்தின் போது 6154 அலுவலகங்களில் 12.01 லட்சம் சதுரடி பரப்பளவு இடம் சுத்தப்படுத்தப்பட்டு, பழைய பொருட்கள் விற்பனை மூலம் ரூ.62.54 கோடி வருவாய் ஈட்டப்பட்டது
प्रविष्टि तिथि:
15 MAR 2023 2:27PM by PIB Chennai
மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களில் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி முதல் 31-ந் தேதி முடிய தூய்மை இயக்கத்தை மத்திய அரசு சிறப்புப் பிரச்சாரமாக நடத்தியது.
இதில் 6,154 அலுவலகங்களில் சுமார் 12.01 லட்சம் சதுரடி பரப்பில், பழைய பொருட்கள் அகற்றப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அகற்றப்பட்ட பழைய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ. 62.54 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. பழைய பொருட்கள் அகற்றப்பட்ட இடங்கள் நூலகமாகவும், மாநாட்டு அரங்கமாகவும், உணவகமாகவும், நலவாழ்வு மையமாகவும், வாகனங்களை நிறுத்துமிடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மக்களவையில் இத்தகவலை மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்வு ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
AD/PKV/AG/PKV
(रिलीज़ आईडी: 1907131)
आगंतुक पटल : 147