உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

Posted On: 14 MAR 2023 3:34PM by PIB Chennai

மத்திய அரசின் முன்னோடித் திட்டமான பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2017-18ம் ஆண்டு முதல் 2022-23ம் ஆண்டு வரை ரூ.4,439.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

இந்த 4,439.20 கோடி ரூபாயில் 28.02.2023 வரை மானிய உதவியாக 3566.80 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள், உணவுப் பதப்படுத்துதல் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு உள்ளிட்ட 1,375 உணவுப் பதப்படுத்துதல் திட்டங்களுக்கு உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.8,536.14 கோடியாகும்.

சம்பதா திட்டத்தின் மூலம் 56.01 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 8 லட்சத்து 28 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

***

AD/IR/SG/RR



(Release ID: 1906791) Visitor Counter : 103


Read this release in: English , Urdu , Telugu