நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை 38.58 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன

தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 கோடி பேருக்கு ரூ.1.99 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2023 7:30PM by PIB Chennai

பிரதமரின் முத்ரா கடன் வழங்கும் திட்டம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து ஜனவரி 27-ந் தேதி வரையிலான நிலவரப்படி 38.58 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 26.35 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 68 சதவீதமாகும். இதே போல, எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு 51 சதவீத கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 4,03,63,219 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த தொகை ரூ.199068.64 கோடியாகும். புதுச்சேரிக்கு 911718 பேருக்கு, ரூ.5,282.06 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் கரத் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID:1906552)

SRI/PKV/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1906654) வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi