கலாசாரத்துறை அமைச்சகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் நீதித்துறை பிரதிநிதிகள் மார்ச் 10-ம் தேதியன்று பிரதமர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர்
Posted On:
12 MAR 2023 2:22PM by PIB Chennai
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்/தலைவர்கள் 2023 மார்ச் 10-ம் தேதியன்று பிரதமர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். அவர்களை
நேரு நினைவு அருங்காட்சியகம் & நூலகத்தின் இயக்குநர் திரு. சஞ்சீவ் நந்தன் சஹாய் வரவேற்றார். இந்த குழுவில் சீன உச்ச நீதிமன்ற துணைத் தலைவர் ஜிங்ஹாங் காவ், கஜகஸ்தான் குடியரசின் உச்ச நீதிமன்றத் தலைவர் அஸ்லம்பெக் மெர்கலியேவ், கிர்கிஸ்தான் குடியரசின் உச்ச நீதிமன்றத் தலைவர் ஜமிர்பெக் பசார்பெகோவ், ரஷ்ய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வியாசஸ்லாவ் எம். லெபடேவ், தஜிகிஸ்தான் குடியரசின் உச்ச நீதிமன்றத்தின் தலைவர் திரு. ஷெர்முஹம்மது ஷோஹியோன், பெலாரஸ் குடியரசின் உச்ச நீதிமன்ற துணைத் தலைவர் வலேரி கலின்கோவிச் ஆகியோர் அடங்குவர்.
பிரதமர் அருங்காட்சியகம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து உள்ள ஒவ்வொரு இந்தியப் பிரதமருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு, கடந்த 75 ஆண்டுகளில் நமது தேசத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் எவ்வாறு பங்களித்துள்ளனர் என்பதை விளக்குகிறது. நமது பிரதமர்கள் சமூகத்தின் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும், பல்வேறு அடுக்குகளிலிருந்தும் வந்தவர்கள். நமது பிரதமர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாட்டை வழிநடத்தி, நாட்டின் அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்தையும் உறுதி செய்த கதையை இந்த அருங்காட்சியகம் எடுத்துச் சொல்கிறது. இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் இங்கு வருகை தந்துள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு பிரதமர் அருங்காட்சியகம் முழுமையாக சுற்றிக் காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது. வெவ்வேறு பிரதமர்களின் தலைமையிலான இந்திய ஜனநாயகத்தின் தனித்துவமான பயணத்தை அவர்கள் பாராட்டினர்.
***
SRI/CR/DL
(Release ID: 1906110)
Visitor Counter : 153