சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

கோவாவில் வனத் தீ எரிந்து கொண்டிருக்கும் 48 இடங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு இடத்திலும் தீ விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

மலர்கள் மற்றும் விலங்கினங்களுக்குப் பெரிய இழப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை

Posted On: 11 MAR 2023 8:49AM by PIB Chennai

மார்ச் 05, 2023 முதல் கோவாவின் பல்வேறு பகுதிகளில் காடுகள், தனியார் பகுதிகள், பொது இடங்கள், தோட்டங்கள், வருவாய் நிலங்கள் போன்றவற்றில் ஆங்காங்கே தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருடன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் இயக்குநரகம் போன்ற பிற துறைகள் இணைந்து செயல்படுகின்றன. தீ விபத்து தொடர்பான உள்ளூர் தேவைகளை முதன்மையாக நிவர்த்தி செய்வதோடு   பொருட்களையும் திரட்டி பாதுகாப்பை உறுதிசெய்து வருகின்றனர். நெருப்பு இருக்கும் இடங்களில் நெருப்பு கட்டுப்படுத்தப்பட்டு, இயற்கை வளங்கள் உட்பட உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படாமல் அல்லது குறைந்தபட்ச சேதாரத்துடன் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்து அனைத்து பொறுப்பு அதிகாரிகளுக்கும் அவ்வப்போது தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

காட்டுத் தீ நிலைமையை நிவர்த்தி செய்ய களத்தில்  பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

 

 தீயைத் தொடர்ந்து கண்காணிக்கக் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை:

இந்திய வன ஆய்வுத் துறை மூலம் தரப்படும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துகளை உடனடியாக கவனிக்க உடனுக்குடன் தொடர்ந்து  களப்பணியாளர்களுக்கு சரியான புவி சார் ஒருங்கிணைப்புகள் மற்றும் தீ இருக்கும் இடங்களின் வரைபடங்கள் பகிரப்படுகின்றன.

 

ii வனப்பகுதியைப் பல பிரிவுகளாகப் பிரித்து DCF / ACF நிலை அலுவலர்கள் தீ நிலைமையைக் கண்காணிப்பதற்காகப் பொறுப்பேற்றுள்ளனர்: பாதிக்கப்பட்ட பகுதிகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, DCF மற்றும் ACF நிலை அதிகாரிகளுக்கு தீ விபத்துகளை உடனடியாகக் கவனிக்க தீவிர மேலாண்மைக்காக பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. பல துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு 750-க்கும் மேற்பட்டோர் போர்க்கால அடிப்படையில் தீ விபத்துகளைக் கவனிப்பதற்காகக் களத்தில் உள்ளனர்.

 

iii அங்கீகரிக்கப்படாதவர்களின் நுழைவுக்குத் தடை, வன மற்றும் வனவிலங்குச் சட்டங்களின் கடுமையான அமலாக்கம்:

வனப் பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைவதைச் சரிபார்த்துத் தடுக்க DCFS-க்கு வனச் சட்டங்களை உறுதிசெய்து கடுமையாகச் செயல்படுத்தவும்  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் அளவிலும்  விசாரணைக்காக காவல் துறையிடம் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

 

iv. கோட்டத் துறைகளுடன் ஒருங்கிணைப்பு:

வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் இயக்குநரகம், உள்ளூர் சமூகம், பஞ்சாயத்து அமைப்புகள் ஆகியோரின்  ஒருங்கிணைப்புடன் கூட்டுக் குழுக்கள் போர்க்கால அடிப்படையில் தீ விபத்துகளை உடனடியாக நிர்வகிப்பதற்கு களத்தில் இருக்கின்றனர்.

 

v. பேரிடர் மேலாண்மை எந்திரங்களை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள்  கோரிக்கை: வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வரம்பில் பேரிடர் மேலாண்மை இயந்திரங்களை அந்தந்த அதிகார வரம்பில் செயல்படுத்துவதற்காக  தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையின் இயக்குநர் உட்பட ஆட்சியர்கள், காவல் துறையினர் ஆகிய உயர் அதிகாரிகளுக்குத் தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

 

vi. அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் பொது மக்கள் தொடர்பு: பெருமளவில் பொதுமக்களிடையே காட்டுத் தீ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஊடகங்கள் மூலம் செய்ய வேண்டியவை  செய்யக்கூடாதவை என்ற வடிவில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய செய்திகள்  பரப்பப்படுகின்றன.

 

vii. ஒவ்வொரு இடத்திலும் தீ விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது:

05.03.2023 முதல் ஏற்பட்ட தீ விபத்துகள் ஒவ்வொன்றின் மீதும் விரிவான விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அனைத்து DCFS களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

viii வனத் தீ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்:

 களப்பணியாளர்களும் களத்தில் உள்ள குழுவினரும் தீயை அணைக்க   புதர்களை அழித்தல் காய்ந்த இலை குப்பைகளை அகற்றுதல் நெருப்பை அணைத்தல் என தீ அணைப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

ix. தீ மீண்டும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள தீ அணைக்கப்பட்ட அனைத்து இடங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 

X. காட்டுத் தீ மேலாண்மைக்கு இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையின் வான்வழி ஆதரவு:

இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் மாநிலம் முழுவதும் உள்ள தீயின் அளவைக் கண்டறிய வனப் பகுதிகளில் தொடர்ந்து வான்வழிப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் பகுதிகளின் அளவை மதிப்பிடுவதற்கு ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. அணுக முடியாத பகுதிகளில் இந்திய கடற்படை மற்றும் வான்படை வானிலிருந்து நீர் ஊற்றி   தீயை அணைப்பதில் வான்வழி பணிகளில் ஈடுபட்டுள்ளது. களத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, 05.3.2023 முதல் 10.3.2023 வரை 1000 மணிநேரம் வரை தீயணைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. 48 தீயணைப்புக்கான பகுதிகள் கண்டறியப்பட்டு பஞ்சாயத்து அமைப்புகள்  உட்பட பல துறைகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

10.3.2023 அன்று காலை 10 மணி வரை 7 இடங்களில் இன்னும் தீ எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள், பஞ்சாயத்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளின் ஊழியர்கள் சேர்ந்து இதுவரை 41 இடங்களில் ஏற்பட்டிருந்த தீயை அணைத்துள்ளனர்.

 

வ. எண்

நிலத்தின்  தன்மை

தீ அணைக்கப்பட்ட பகுதிகள்

தீ எரிந்து கொண்டிருக்கும் இடங்கள்

1

தனியார் இடம்

5

 

2

தனியார் காடு

2

 

3

பொது இடம்

1

 

4

அரசின் காடு

31

7

5

GFDC

3

 

 

மொத்தம்

41

7

 

கடந்த சில நாட்களாக கவனிக்கப்பட்ட விபரங்கள்:

I. நீண்ட வறண்ட காலநிலை (2022 அக்டோபர் முதல் கிட்டத்தட்ட மழை பெய்யவில்லை), முன்னெப்போதும் இல்லாத உயர் கோடை வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீ ஏற்பட சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் குறிப்பாக இரவு நேரங்களில் காணப்பட்ட அதிகமான காற்றால் நிலைமை மோசமாகிவிட்டது.

ii மாநிலம் முழுவதும் உள்ள இலையுதிர் பகுதிகளில் இருந்து பெரும்பாலும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. காணப்பட்ட நெருப்பின் தன்மை மேற்பரப்பு நெருப்பாகும். மேற்பரப்புத் தீயானது தளர்வான மற்றும் உலர்ந்த இலைக் குப்பைகள், உலர்ந்த மூலிகைத் தாவரங்கள், புதர்கள், சிறிய மரங்கள் மற்றும் தரையின் மேற்பரப்பில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் மரக்கன்றுகளை எரிக்கிறது. பெரும்பாலும் எரியும் மேற்பரப்பு நெருப்பின் பரவல் இறந்த மரங்கள், விழுந்த மரங்கள் இவற்றால் அதிகரிக்கின்றன. எரியும் குப்பைகள் காரணமாக பெரும்பகுதி புகை மற்றும் புகைமூட்டத்தால் மூடப்பட்டது.

iii உள்ளூர் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கும் கால்நடைகளுக்கான தீவனமாக மேய்ச்சல் நிலங்கள் மற்றும் புல்வெளிகளில் புதிய புற்கள் வளரவேண்டுமென்ற நோக்கத்தில் புற்களை வெட்டுதல் எரித்தல் போன்ற முறைகளைக் கையாளுகின்றனர். இதனால் பெரிய அளவிலான புல்வெளிகள் எரிக்கப்பட்டிருக்கலாம்.

iv. இதேபோல், முந்திரித் தோட்டத்தின் வளர்ப்பு பராமரிப்பில் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக முந்திரித் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலும் முந்திரி மரத்தின் அடியில் ஏற்படும்  களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த களைகளை வெட்டுவது அல்லது எரிப்பது என்ற முறையினையே பின்பற்றுகின்றனர் என்பதும் தெரிகிறது.

v. தீ பெரும்பாலும் இயற்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்று தோன்றுகிறது. அதற்கான காரணம் கவனக்குறைவாக இருக்கலாம் அல்லது வேறுவிதமாக இருக்கலாம். அதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அதிக வெப்பநிலை மற்றும் அதிக காற்று தீ பரவுவதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

vi. மலர்கள் மற்றும் விலங்கினங்களைப் பொறுத்தவரை பெரிய இழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

 

***

SRI/CJL/DL



(Release ID: 1905849) Visitor Counter : 150