வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய இளையோர் உச்சிமாநாடு (13-14 மார்ச் 2023)

Posted On: 10 MAR 2023 1:29PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய இளையோர் உச்சிமாநாடு, பொலிவுறு நகர இயக்கம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், இளைஞர் நலத்துறை மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் போன்றவைகள் இணைந்து நடத்துகின்றன. மேலும் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், நகர்ப்புறம்20 மற்றும் இளையோர்20 பணிக்குழுக் கூட்டங்கள் மூலம் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இணைந்து இந்த 2 நாள் கருத்தரங்கை வரும் மார்ச்
13-14 தேதிகளில் புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் நடத்துகிறது.

உலக அளவில் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக்கொள்வதற்கு ஏதுவான ஒரு சந்தர்ப்பத்தை நகர்ப்புறம் 20 வழங்குகிறது என்று மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம் & இயற்கை வாயுத்துறை அமைச்சர் திரு ஹர்திப் சிங் பூரி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற நகர்ப்புற20 அறிமுகக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

 

*****

AP/GS/RJ/KPG


(Release ID: 1905713)