எரிசக்தி அமைச்சகம்

மின்சார கையிருப்பை உறுதி செய்யும் பிரத்யேக தளம் அறிமுகம்

Posted On: 10 MAR 2023 10:01AM by PIB Chennai

மின்சார தேவை அதிகரிக்கும் காலத்தில் அதன் கையிருப்பை உறுதி செய்வதற்கான பிரத்தியேக தளத்தை (PUShP- High Price Day Ahead Market and Surplus Power Portal) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் மற்றும் மின்சார துறையைச் சேர்ந்த 200 பங்குதாரர்கள் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் இந்த தளத்தைத் தொடங்கி வைத்தார். மத்திய எரிசக்தி மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு கிருஷன் பால் குர்ஜர், எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமார் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஆர். கே. சிங், கோடை காலங்களில் போதுமான மின்சார கையிருப்பை உறுதி செய்யும் உத்தியின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். பயன்பாட்டில் உள்ள மின்சாரம் அனைத்தும் நுகர்வோருக்கு  விநியோகிக்கப்படுவதை இது உறுதி செய்யும், என்றார் அவர். இதன் இயக்க முறையை விளக்கிய அமைச்சர், அதிக விலையை நிர்ணயிக்க எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று உறுதிப்பட தெரிவித்தார். ஒரு அலகுக்கு ரூ. 12க்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை மட்டுமே ஹெச்.பி.-டாம் தளத்தில் இயங்க அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார். ஹெச்.பி.-டாம் இயக்க முறையில் விலை நியாயமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய மின்சார ஆணையம் மற்றும் இந்திய மின்சார விநியோக ஒழுங்குமுறை அமைப்பை அவர் கேட்டுக்கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கிருஷன் பால் குர்ஜர், முந்தைய காலத்திற்கு மாறாக தற்போது மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று தெரிவித்தார். இந்த புதிய இயக்கமுறையின் வாயிலாக போதுமான மின்சார இருப்பு உறுதி செய்யப்படும் என்று கூறினார். புதிய சந்தை இயக்கமுறையின் பயன்களை விளக்கிய திரு ஆலோக் குமார், ஒரு அலகுக்கு ரூ. 50 என்பது ஒரு தொழில்நுட்ப வரையறை மட்டுமே என்றும், அதைவிட குறைந்த விகிதத்தை தான் சந்தை நிறுவனங்கள் நிர்ணயிக்கும் என்றும் ஒரு சில அறிக்கைகளை சுட்டிக்காட்டி தெளிவுப்படுத்தினார்.

(Release ID: 1905479)

***

AD/RB/RR



(Release ID: 1905519) Visitor Counter : 171