அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை அறிவித்தார் டாக்டர் ஜிதேந்திர சிங். இந்த இணையதளம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படும்
Posted On:
09 MAR 2023 3:44PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; புவி அறிவியல்; பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை அறிவித்தார். இந்த இணையதளம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படும்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தினக்கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். மகளிர் விஞ்ஞானிகளிடம் இருந்து பெறப்படும் சிறப்பு அழைப்புகள் அதே நாளில் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும். பெண் விஞ்ஞானிகள் மட்டுமே மானியம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்றும் தெரிவித்தார். ஆராய்ச்சிக்கான உதவித்தொகை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை என்ற வரைமுறைக்கு அதிகமாகக்கூடாது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்..
***
AP/IR/RJ/KPG
(Release ID: 1905369)
Visitor Counter : 155