சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மக்கள் மருந்தக தின இறுதிநாள் கொண்டாட்டத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்
Posted On:
07 MAR 2023 4:52PM by PIB Chennai
மக்கள் மருந்தக தின இறுதிநாள் கொண்டாட்டத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மருந்து உற்பத்தித்துறை இணைச் செயலாளர் திரு ரஜ்னேஷ் திங்கல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மக்கள் மருந்தக தினக் கொண்டாட்டத்தை கடந்த 5-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது.
மக்கள் மருந்தக தினம் 2023 நிகழ்ச்சியின் 3-ம் நாள் "மக்கள் மருந்தகம்-தாய் சக்தியை நோக்கி ஒரு படி" என்ற பொருளில் கடைப்பிடிக்கப்பட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் மருந்தக மையங்களில் மகளிர் பயனாளிகள் கலந்துகொண்டனர். மக்கள் மருந்தகத்தின் மருந்துகளின் உடல்நலன் பயன் குறித்து மகளிர், பெண் மருத்துவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். குறிப்பிட்ட இடங்களில் பெண்களுக்கு தேவையானப் பொருட்கள் அடங்கியப் பெட்டகங்கள் 3,500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டது.
***
AP/IR/RJ/RJ
(Release ID: 1904913)