நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நாட்டில் ஆண்டு முழுவதும் நியாயமான விலையில் போதுமான அளவு சர்க்கரை கிடைக்கும்
Posted On:
06 MAR 2023 6:27PM by PIB Chennai
எத்தனால் உற்பத்திக்காக 50 லட்சம் மெட்ரிக் டன் தனித்த ஒதுக்கீட்டுடன் 2022-23-ம் ஆண்டு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) 336 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
275 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உள்நாட்டு நுகர்வையும், 61 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதியையும் என்பதைக் கருத்தில் கொண்ட பின், 3 மாதங்களுக்கு உள்நாட்டுத் தேவையை எதிர்கொள்ளத் தேவையான 70 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை இறுதிக் கையிருப்பாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஆண்டு முழுவதும் நியாயமான விலையில் உள்நாட்டு நுகர்வுக்கு போதுமான அளவு சர்க்கரை இருக்கும். சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.41.50 என்பதாக இருக்குமென்றும் வரும் மாதங்களில் இந்த அளவு ரூ.37 முதல் 43 வரை செல்லும் என்றாலும் விலையேற்றம் பெரிதளவு இருக்காது.
மத்திய அரசின் தலையீடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் சர்க்கரைத் துறை தற்சார்பை அடைந்துள்ளது. 2021-2022-ம் ஆண்டு சர்க்கரைப் பருவத்தில் 99.7 சதவீத கரும்புக்கான நிலுவை தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற சர்க்கரை பருவத்தை விட அதிகமாகும்.
***
AP/IR/RJ/RJ
(Release ID: 1904676)
Visitor Counter : 177