பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் பயிற்சிப் பட்டறை
प्रविष्टि तिथि:
05 MAR 2023 4:36PM by PIB Chennai
மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் மாண்புமிகு டாக்டர் ஜிதேந்திர சிங்கின் வழிகாட்டுதலின் பேரில், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக, ஓய்வூதியக் கொள்கை மற்றும் ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓய்வூதிய விதிகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 50 ஆண்டுகளில் பல ஆணைகள்/அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 2021 டிசம்பரில் மத்திய சிவில் சர்வீஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021-ஆகக் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஓய்வூதியம் வழங்குவதில் முக்கியப் பங்கு வங்கிகளுக்கே என்பதால், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையானது வங்கிகளின் மத்திய ஓய்வூதிய செயலாக்க மையங்கள் (CPPCs) மற்றும் வங்கியில் ஓய்வூதியம் தொடர்பான பணிகளைக் கையாளும் களப்பணியாளர்களுக்கான விழிப்புணர்வுப் பட்டறைகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக, பாங்க் ஆப் பரோடா அதிகாரிகளுக்கான பயிலரங்கை நடத்துவதற்காக, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறையின் செயலாளர் வி. ஸ்ரீனிவாஸ், கூடுதல் செயலாளர் சஞ்சீவ் நரேன் மாத்தூர் தலைமையிலான மத்திய அரசின் குழு, போபாலில் உள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா அதிகாரிகளுக்கான பயிலரங்கம் 2023 6 மார்ச்-ம் தேதியன்று போபாலில் நடைபெறுகிறது. சிபிபிசி மற்றும் பேங்க் ஆஃப் பரோடாவின் ஓய்வூதியம் வழங்கும் கிளைகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த பயிலரங்கில் பங்கேற்கின்றனர். 2023-24 ஆம் ஆண்டில் மற்ற ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுடன் இணைந்து, இதே போன்று விழிப்புணர்வுப் பயிலரங்குகள் நடத்தப்படவுள்ளன.
***
AP/CR/DL
(रिलीज़ आईडी: 1904439)
आगंतुक पटल : 168