விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வேளாண்துறை அமைச்சகம் ஊக்குவிக்கும் ‘சிறுதானிய’ சிறப்பு சந்தைப்படுத்தல் பிரச்சாரம்

Posted On: 05 MAR 2023 3:11PM by PIB Chennai

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை  அமைச்சகத்தால் ஊக்குவிக்கப்படும் சிறுதானிய சிறப்பு சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை, சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது.  பிரச்சாரத்தின் கீழ், நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஆதரிக்கும் நோக்கத்துடன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதை ஊக்குவிப்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு நிர்வாக இயக்குநர் டாக்டர் மணீந்தர் கவுர் திவேதி, இந்திய விற்பனையாளர்களுக்காக இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட சந்தையான ஓஎன்டிசியின் மை ஸ்டோர் மூலம் சிறுதானியங்களை விற்கும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளிடம்  இருந்து நேரடியாக வாங்க குடிமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.

 விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்க பொது மக்களை ஊக்குவிக்கிறது. வாங்குபவர்கள் தூய்மையான மற்றும் உண்மையான விளைபொருட்களைப் பெறுகிறார்கள். அவர்கள் வாங்குவதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கின்றனர்.

***

AP/PKV/DL



(Release ID: 1904398) Visitor Counter : 186