பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாஞ்சிம் - வாஸ்கோ இடையேயான இணைப்பு மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு சுற்றுலாவை மேம்படுத்தும்: பிரதமர்

प्रविष्टि तिथि: 05 MAR 2023 9:42AM by PIB Chennai

தேசிய நீர்வழிகள்-68 கட்டுமானப் பணிகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பாஞ்சிம் முதல் கோவாவில் உள்ள வாஸ்கோ இடையேயான தூரம் 9 கிலோ மீட்டராகக் குறைக்கப் பட்டுள்ளதால், 20 நிமிடங்களுக்குள் இதற்கான பயண நேரம் முடியும். முன்பு பாஞ்சிம் முதல் வாஸ்கோ வரையிலான தூரம் சுமார் 32 கிலோ மீட்டராக இருந்தது. அதற்கான பயண நேரம் சுமார் 45 நிமிடங்கள்.

 

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள்சுற்றுலாத் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் ஒய். நாயக்கின் ட்விட்டருக்குப் பதிலளித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவாவில் உள்ள பாஞ்சிம் முதல் வாஸ்கோ வரையிலான இந்த இணைப்பு மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு சுற்றுலாவையும் மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.

 

***

AP/CJL/DL


(रिलीज़ आईडी: 1904356) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam