சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

உலகின் முதல் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பு மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் உள்ள வானி-வொரோரா நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டது.

Posted On: 04 MAR 2023 2:09PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம், விதர்ப், வாணி-வரோரா நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ள உலகின் முதல் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்புச் சுவரின் மேம்பாட்டின் மூலம் தற்சார்பு இந்தியாவை அடைவதில் ஒரு சாதனை செய்யப்பட்டுள்ளது.

பாகு பல்லி என்று பெயரிடப்பட்ட இந்த மூங்கில் விபத்து தடுப்பு, இந்தூர் பீதாம்பூரில் உள்ள நேஷனல் ஆட்டோமோட்டிவ் டெஸ்ட் டிராக்ஸ் (நாட்ராக்ஸ்) போன்ற பல்வேறு அரசு நிறுவனங்களில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, ரூர்க்கியில் உள்ள கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) செய்த தீ மதிப்பீட்டுச் சோதனையில், முதல் தரம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூங்கில் தடையின் மறுசுழற்சி மதிப்பு 50-70% ஆகும். அதேசமயம் எஃகு தடையின் மறுசுழற்சி மதிப்பு 30-50% ஆகும்.

இந்த சாலைத் தடையை தயாரிக்க Bambusa Balcoa வகை மூங்கில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கிரியோசோட் எண்ணெயுடன், மறுசுழற்சி செய்யப்பட்ட உயர் அடர்த்தி பாலி எத்திலீன் (HDPE) பூசப்பட்டது. இந்தச் சாதனையானது, மூங்கில் துறைக்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் இந்த விபத்துத் தடையானது எஃகுக்கு சரியான மாற்றுத் தீர்வை வழங்கி சுற்றுச்சூழல் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்கிறது. மேலும், இது ஒரு கிராமப்புற மற்றும் விவசாயத்திற்கு ஏற்ற தொழில் என்பதால், குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது.

 

***

AP/CR/DL



(Release ID: 1904186) Visitor Counter : 204