நிலக்கரி அமைச்சகம்

அதிக உற்பத்தித் திறன் கொண்ட வர்த்தக நிலக்கரிச் சுரங்கங்களின் உற்பத்தி 100 மில்லியன் டன்னைக் கடந்துள்ளது

Posted On: 03 MAR 2023 4:17PM by PIB Chennai

அதிக உற்பத்தித் திறன் கொண்ட வர்த்தக நிலக்கரிச் சுரங்கங்களின் மூலம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி (2023 மார்ச் 2-வரை) முதல் முறையாக 100 மில்லியன் டன்னைக் கடந்துள்ளது. 

இதேபோல் 2023 மார்ச் 2-ம் தேதி மட்டும் 5.09 டன் நிலக்கரியை வர்த்தகச் சுரங்கங்கள் உற்பத்தி செய்துள்ளன. இது, முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒருநாள் நிலக்கரி உற்பத்தியின் மிக அதிகபட்சமாகக் கருதப்படுகிறது.

2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த நிதியாண்டின் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தின் நிலக்கரி உற்பத்தி 29.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது.  எனவே 2022-23  நிதியாண்டின் நிலக்கரி உற்பத்தி 112 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என நிலக்கரி அமைச்சகம் நம்புகிறது.

2022-23-ம் நிதியாண்டில் 4 புதிய நிலக்கரி சுரங்கங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் 2 நிலக்கரி சுரங்கங்கள் இம்மாதம் உற்பத்தியைத் தொடங்க உள்ளன.

 

***

AP/ES/RJ/KPG



(Release ID: 1904056) Visitor Counter : 113


Read this release in: Urdu , English , Hindi