ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே பாதுகாப்புத் தொடர்பாக பிப்ரவரி மாதம் முழுவதும் சிறப்புப் பிரச்சார இயக்கத்தை ரயில்வே பாதுகாப்புப் படை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAR 2023 3:46PM by PIB Chennai

ரயில்வே பாதுகாப்புத் தொடர்பாக பிப்ரவரி மாதம் முழுவதும் சிறப்புப் பிரச்சார இயக்கத்தை ரயில்வே பாதுகாப்புப் படை நடத்தியது. ரயில்வே சொத்துகள் பயணிகள் பகுதி மற்றும் பயணிகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை பொறுப்பு வகிக்கிறது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பு இயக்கத்தை இந்தப் படை நாடு முழுவதும் மேற்கொண்டது. ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் போக்குவரத்தைத் தடுப்பது, ஓடும் ரயில்களின் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்களைத் தடுப்பது, ரயில்வே சொத்துகளுக்கும், பயணிகளுக்கும், சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவது ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை நோக்கமாகக் கொண்டு இந்த ஒரு மாத இயக்கம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2800 பார்சல்கள் சோதனையிடப்பட்டன. இந்த சோதனைகளின் போது ரயில்வே விதிமுறைகளுக்குப் புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

 

***

AP/PLM/SG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1904053) வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi