பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய விமானப்படைக்கு ரூ 6,800 கோடி செலவில் எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானத்தை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 01 MAR 2023 6:42PM by PIB Chennai

இந்திய விமானப்படைக்கு ரூ 6,828.36 கோடி செலவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்திடமிருந்து 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானத்தை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விமானம் 6 ஆண்டு காலத்தில் வழங்கப்படும்.

இந்த விமானம் 56% உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதாகும் இது 60%  வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் எம்எஸ்எம்இ-கள் உட்பட இந்திய தனியார் தொழில்துறையினரை வழங்கல் தொடரில் ஈடுபடுத்த உள்ளது. இந்த விமானக் கொள்முதல் மூலம் 100-க்கும் அதிகமான எம்எஸ்எம்-க்களில் 1500 பேர் நேரடியாகவும் 3000 பேர் வரை மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

எச்டிடி-40 கொள்முதல் செய்வது இந்திய விண்வெளி பாதுகாப்புக்கு வலுசேர்ப்பதாகவும் தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். 

***

 

AP/SMB/JS/KPG        (Release ID: 1903482) Visitor Counter : 109