பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தலைமறைவாகும் பொருளாதாரக் குற்றவாளிகளை விரைந்து உரியநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கும் சொத்துக்களை மீட்பதற்கும் பலதரப்பு செயல்திட்டத்தை உருவாக்குமாறு ஹரியானாவின் குருகிராமில் இன்று நடைபெற்ற முதலாவது ஊழல் தடுப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் ஜி20 நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது
Posted On:
01 MAR 2023 4:50PM by PIB Chennai
தலைமறைவாகும் பொருளாதாரக் குற்றவாளிகளை விரைந்து உரியநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கும் சொத்துக்களை மீட்பதற்கும் பலதரப்பு செயல்திட்டத்தை உருவாக்குமாறு ஹரியானாவின் குருகிராமில் இன்று நடைபெற்ற முதலாவது ஊழல் தடுப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் ஜி20 நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஊழலை சற்றும் சகித்துக்கொள்ளாத இந்தியா இத்தகைய நிர்வாகச் சூழலை மேம்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டிருப்பதாகக் கூறினார்.
பொருளாதாரக் குற்றங்களால் பல நாடுகள் பிரச்சனையை எதிர்கொண்டிருப்பதாகவும் குறிப்பாக ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பால் குற்றவாளிகள் தப்பிச்செல்வதால் பிரச்சனை ஏற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்காக இந்தியாவில் பொருளாதாரக் குற்றவாளிகள் தப்பிச்செல்வதை தடுப்பதற்கு 2018ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் காரணமாக சுமார் 272 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் இதில் பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் 180 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கான சொத்துக்களை அமலாக்க இயக்ககம் மாற்றம் செய்திருப்பதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது மற்றும் ஜி20 நாடுகளுக்கிடையே தகவல்களை பகிர்ந்துகொள்வது ஆகியவற்றுக்கு தீவிரமான, பயனுள்ள நடைமுறைகளை ஏற்படுத்துவதில் ஜி20-ன் தலைமைத்துவத்தைப் பெற்றுள்ள இந்தியா கவனம் செலுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கு துணைத்தலைமை பொறுப்பை இத்தாலி ஏற்றிருந்தது.
***
AP/SMB/JS/KPG
(Release ID: 1903473)
Visitor Counter : 165