சுற்றுலா அமைச்சகம்
தென்மண்டலத்தில் நிலையான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுலாத் தளங்கள் மேம்பாடு குறித்த பயிற்சிப் பட்டறையை சுற்றுலா அமைச்சகம் ஐதராபாதில் நடத்தியது
प्रविष्टि तिथि:
01 MAR 2023 1:53PM by PIB Chennai
தென்மண்டலத்தில் நிலையான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுலாத் தளங்கள் மேம்பாடு குறித்த பயிற்சிப் பட்டறையை சுற்றுலா அமைச்சகம் பிப்ரவரி 28 அன்று, ஐதராபாதில் நடத்தியது. இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம், ஐநா சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய இந்தியச் சுற்றுலாச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுலா அமைச்சகம் இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அரசுத் துறை அலுவலகர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, தெலங்கானா, லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுற்றுலாத் துறையினர் இதில் பங்கேற்றனர்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுற்றுலாத் துறை சார்பில் நிலையான சுற்றுலா நடைமுறைகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பசுமை சுற்றுலா என்பது இந்தியாவில்
ஜி20 தலைமைத்துவத்தின் முக்கிய முன்னுரிமையாக ஊக்குவிக்கப்படுகிறது. ஜி20-ன் சுற்றுலாப் பணிக்குழு, சுற்றுலாத் துறையைப் பயன்படுத்தி நிலையான வளர்ச்சி இலக்குகளை இட்டுவது குறித்து செயலாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிப் பட்டறை, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதில், மத்திய சுற்றுலா அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் சுற்றுலாத் துறையினரின் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
***
AP/PLM/RJ/KPG
(रिलीज़ आईडी: 1903368)
आगंतुक पटल : 207