மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹைதராபாத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் குறித்த பிரம்மாண்ட ஸ்டார்ட்-அப் மாநாட்டை மத்திய அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்

Posted On: 28 FEB 2023 5:03PM by PIB Chennai

சுதந்திரத்தின் அமிர்தகாலப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் சார்பில்  கால்நடை, பால்வளம் போன்றவற்றில் தற்போது செயல்பாட்டில் உள்ள மற்றும் வளரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை  ஊக்குவிப்பதற்காக தேசிய பால்வள மேம்பாட்டுக் கழகம், ஸ்டார்ட்-அப் இந்தியா, சிஐஐ மற்றும் தெலங்கானா மாநிலத்தின் கால்நடைப் பராமரிப்புத் துறையோடு இணைந்து இன்று மிகப் பிரம்மாண்டமான மாநாடு ஹைதராபாத்தில் நடத்தியது.

இந்த மாநாட்டில் மத்திய மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகித்தார். இந்தத் துறையின் இணை அமைச்சர்களான டாக்டர் சஞ்சீவ்குமார் பல்யான், டாக்டர் எல். முருகன் மற்றும் தெலங்கானா மாநிலத்தின் கால்நடைப் பராமரிப்பு, மீன் வளத்துறை அமைச்சர் திரு. டி. ஸ்ரீநிவாஸ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, வேளாண்துறையில் பல்லுயிர் பெருக்கம் மூலம்   கால்நடைத்துறையில் அதிகளவில் பொது முதலீட்டை அதிகரிப்பதும், ஊரக வருவாயை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் வலியுறுத்தினார். இத்துறையின் வளர்ச்சிக்கு அனைத்து துறை சார்ந்தவர்களும் நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டும் வகையிலும் இந்தத் துறையைச் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளிக்கவும் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை முனைப்போடு செயல்பட்டு வருகிறது என்றார்.

மத்திய அமைச்சர் டாக்டர். சஞ்சீவ் குமார் பல்யான் பேசும் போது, கால்நடைப் பராமரிப்புத்துறையின் முக்கியத்துவம் குறித்தும் அந்தத் துறையில் உள்ள முக்கிய சவால்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் பேசும் போது, கால்நடைப் பராமரிப்புத்துறையில் அறிவியல் அம்சங்களைப் பயன்படுத்தி ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கினார் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது என்றும் இது தொடர்பாக புதிய மைல்கல்களை எட்ட வேண்டும் என்றும் துறை சார்ந்தவர்களிடமிருந்து சிறந்த ஆலோசனைகளை பெற்று கொள்கைகளை உருவாக்குவோம் என்றும் குறிப்பிட்டார்.

“கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன ஆனால் தற்போது சுமார் 1 லட்சம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கையோடு மூன்றாவது இடத்தில் உள்ளோம் என்றார் உலக அளவில் இறைச்சி ஏற்றுமதில் எட்டாவது இடத்திலும், முட்டை ஏற்றுமதியில் மூன்றாவது இடத்திலும் உள்ளோம். கால்நடைப் பராமரிப்புத்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முன்னனியில் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் தெரிவித்துள்ளார்.

                                ***

AP/GS/JJ/KRS    


(Release ID: 1903169) Visitor Counter : 125


Read this release in: English , Urdu , Telugu