வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புறத் திட்டமிடல். மேம்பாடு மற்றும் தூய்மைக் குறித்து பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக்கருத்தரங்கில் 2023 மார்ச் 1-ம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்
प्रविष्टि तिथि:
28 FEB 2023 6:44PM by PIB Chennai
நகர்ப்புறத் திட்டமிடல். மேம்பாடு மற்றும் தூய்மைக் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக்கருத்தரங்கில் 2023 மார்ச் 1-ம் தேதி காலை 10 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நடத்தும் இந்தக் கருத்தரங்கை சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இணைந்து நடத்துகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகம், ஜல்சக்தி துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்துவது குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதங்கள் நடைபெற உள்ளன.
நகர்ப்புறத் திட்டமிடல் வல்லுநர்கள். நிதி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தொழில்துறையினர், தொழிலாளர் சங்கங்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளனர்.
நகர்ப்புறங்களில் தூய்மைப் பணிகளில், கழிவுநீர்க் கால்வாய்ப் பணிகளில் எந்திரங்களைப் பயன்படுத்துதல், ஈரம் மற்றும் உலர்க்கழிவு மேலாண்மை, கோபர்தன் திட்டத்தின் கீழ் கழிவுகளை வளமாக மாற்றும் தொழிற்சாலைகள், பிரதமரின் பிரணம் திட்டத்தின் கீழ் ஈரப்பதக் கழிவு மேலாண்மை நகர்ப்புறத் திட்டமிடலில் சீர்திருத்தங்கள், 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.
***
AP/PLM/KPG/KRS
(रिलीज़ आईडी: 1903163)
आगंतुक पटल : 149