உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
கர்நாடகாவில் ஷிவமோகா விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
27 FEB 2023 6:01PM by PIB Chennai
கர்நாடகாவில் ஷிவமோகாவில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அத்துடன் ரூ. 3,600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்தப் புதிய விமான நிலையம் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டிடத்தின் பரப்பளவு 4340 சதுர மீட்டராகும். மணிக்கு 300 பயணிகளைக் கையாள முடியும். விமானங்கள் இரவு நேரத்தில் தரையிறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
AP/IR/RJ/KRS
(रिलीज़ आईडी: 1902859)
आगंतुक पटल : 170