வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கைத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இணைந்து நடத்த உள்ளது
Posted On:
27 FEB 2023 3:53PM by PIB Chennai
பட்ஜெட் அறிவிப்புகள், அதை முன்னெடுத்து செல்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கு பிப்ரவரி 28, 2023 அன்று நடைபெற உள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைய வழிக் கருத்தரங்கை நடத்த உள்ளது. இந்த இணைய வழிக் கருத்தரங்கம் ‘அளவில்லா திறன்: தொழில்நுட்ப பயன்பாடு மூலம் எளிதான வாழ்வு என்ற பொருளில் நடைபெறுகின்றது. பிரதமர் திரு நரேந்திர மோடி இணைய வழிக் கருத்தரங்கைத் தொடங்கி வைக்க உள்ளார்.
மொத்தம் 4 அமர்வுகளில் இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெறும். எளிதான தொழில்நுட்பப் பயன்பாடு மூலம் வர்த்தகம் புரிதல் என்ற தலைப்பில் குறிப்பாக சிறிய வணிகர்களுக்காக முன்றாவது அமர்வில் நடைபெற உள்ளது. தேசிய ஒற்றைச் சாளர முறை, வாடிக்கையாளர் விவரங்களை எளிமைப்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் இந்த அமர்வு நடைபெற உள்ளது.
***
AP/IR/RJ/KRS
(Release ID: 1902817)