ஆயுஷ்
azadi ka amrit mahotsav

அசாமின் கஜிரங்கா தேசிய பூங்காவில், முதல் சிந்தனை முகாம் நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு

प्रविष्टि तिथि: 25 FEB 2023 12:22PM by PIB Chennai

அசாமின்  கஜிரங்கா தேசிய பூங்காவில், பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில்,  முதல் சிந்தனை முகாம் நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.  இதில்  மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால்,  இணையமைச்சர் டாக்டர் முஞ்சபரா மஹேந்திர பாய் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் இந்த சிந்தனை முகாமில், ஆயுஷ் துறைசார்ந்த, பிரபல மருத்துவ நிபுணர்கள், பேச்சாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். இந்த 2 நாள் கருத்தரங்கில், ஆயுஷ் துறை  மற்றும் பாரம்பரிய மருந்துகள்  தொடர்பான, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், அவற்றில் புகுத்த வேண்டிய அம்சங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வல்லுநர்கள், மாநில   சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் கல்வித்துறையின்  வல்லுநர்களும் பங்கேற்கின்றனர்.

கருத்தரங்கின் முதல்நாளில், ஆயுஷ் துறையில் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம், பாரம்பரிய மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள், பாரம்பரிய மருத்துவத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான யுக்திகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

***

SRI / ES / DL


(रिलीज़ आईडी: 1902277) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Telugu