சுரங்கங்கள் அமைச்சகம்
இந்திய சுரங்கப் பணி அலுவலகம் மார்ச் 1ஆம் தேதி 75வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது
Posted On:
25 FEB 2023 11:10AM by PIB Chennai
மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சுரங்கப் பணி அலுவலகம் ஐபிஎம் நாக்பூரில் மார்ச் 1 ஆம் தேதி நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் 75வது “கனிஜ் திவாஸ்’’–ஐ கொண்டாடுகிறது. இந்த ஒரு நாள் விழாவில் மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் திரு ராவ்சாகேப் பாட்டீல் தன்வே ஆகியோர் உரையாற்றுகின்றனர். முற்பகலில் நடைபெறவுள்ள தொழில்நுட்ப அமர்வில், இந்தியாவின் சுரங்கத் துறையின் முன்னேற்றங்கள் மற்றும் சமீபத்திய முன்முயற்சிகளை எடுத்துக்காட்டும் சிறப்புக் கண்காட்சியை, சுரங்க அமைச்சகத்தின் செயலர் திரு விவேக் பரத்வாஜ் திறந்து வைக்கிறார்.
2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான நிலையான சுரங்க நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக 76 ஐந்து நட்சத்திர மதிப்பிலான சுரங்கங்களுக்கு பாராட்டு, பல்வேறு சுரங்க நிறுவனங்களின் விளக்கக்காட்சி, ஐபிஎம்மில் திரைப்படம் காட்சிப்படுத்தல், தபால் தலைகள் மற்றும் நினைவு பரிசு வெளியீடு ஆகியவை நிறுவன தின கொண்டாட்டத்தின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும் .
தேசிய கனிமக் கொள்கை மாநாட்டின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1948 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி இந்திய சுரங்கப் பணி அலுவலகம் (ஐபிஎம்) உருவாக்கப்பட்டது. ஒரு சிறிய தொடக்கத்தில் இருந்து முற்றிலும் ஆலோசனை அமைப்பாக, பல ஆண்டுகளாக ஐபிஎம் நாட்டின் சுரங்க மற்றும் கனிமத் துறையின் பல்வேறு அம்சங்களைக் கையாளும் முதன்மையான தேசிய அமைப்பாக உருவெடுத்துள்ளது. சட்டப்பூர்வ விதிகளைச் செயல்படுத்துதல், பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவையும் இதன் முக்கிய பணிகளாகும்
***
SRI / PKV / DL
(Release ID: 1902275)
Visitor Counter : 158