நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூன்று மின்னணு ஏலத்தின் வாயிலாக வெளிச்சந்தையில் 18.05 லட்ச மெட்ரிக் டன் அளவில் கோதுமை விற்பனை

இடுகை இடப்பட்ட நாள்: 24 FEB 2023 3:15PM by PIB Chennai

மூன்று மின்னணு ஏலத்தின் வாயிலாக வெளிச்சந்தையில்  18.05 லட்ச மெட்ரிக் டன் அளவில் கோதுமை விற்பனையை இந்திய உணவுக் கழகம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரி 25-ந் தேதி மத்திய அரசு கோதுமை மற்றும் ஆட்டா விலை உயர்வைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக 30 லட்சம் மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் கோதுமை மற்றும் ஆட்டா விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. வரும் மார்ச் 15-ந் தேதி வரையில் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் கோதுமை மின்னணு ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படும். இதன் விளைவாக கோதுமை கையிருப்பை அதிகப்படுத்துவதோடு நுகர்வோர்களின் நலன்களும் பாதுகாக்கப்படும்.

***

AP/GS/RR/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1902053) வருகையாளர் எண்ணிக்கை : 223
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu