குடியரசுத் தலைவர் செயலகம்
ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்கள் நியமனத்திற்கான ஆதாரச் சான்றிதழ்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்
प्रविष्टि तिथि:
24 FEB 2023 1:43PM by PIB Chennai
தெற்கு சூடான், ஓமன், பெரு மற்றும் கம்போடியா, செஷல்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் துணைத் தூதர்கள் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவை சந்தித்து தங்கள் நியமனத்திற்கான ஆதாரச் சான்றிதழ்களை வழங்கினர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமதி திரௌபதி முர்மு அந்த சான்றிதழ்களை ஏற்றுக் கொண்டார். கீழ்கண்ட பட்டியலில் ஆதாரச் சான்றிதழ்களை வழங்கியவர்கள் விவரம்:
- மேன்மை பொருந்திய திருமதி.விக்டோரியா சாமுவேல் அரு, தெற்கு சூடான் குடியரசின் தூதர்
- மேன்மை பொருந்திய திரு.இஸ்சா சலா அப்துல்லா சலா அல் ஷிபானி, ஓமன் தூதர்
- மேன்மை பொருந்திய திரு.ஜாவியர் மேனுவெல் பாலினிச் வேலர்டி, பெரு குடியரசின் தூதர்
- மேன்மை பொருந்திய திருமதி.லலதியானா அக்குச்சி, செஷல்ஸ் குடியரசின் துணைத் தூதர்
- மேன்மை பொருந்திய திரு.கொய் குவாங், கம்போடியா அரசின் தூதர்
***
(Release ID: 1901979)
AP/GS/RR/KRS
(रिलीज़ आईडी: 1902035)
आगंतुक पटल : 199