பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-இலங்கை இடையேயான பாதுகாப்பு உறவை பலப்படுத்த இருநாட்டு பாதுகாப்புச் செயலாளர்கள் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 23 FEB 2023 5:11PM by PIB Chennai

இந்தியா-இலங்கை இடையே 7-வது வருடாந்திர பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பிப்ரவரி 23, 2023 அன்று புதுதில்லியில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் ஜென்ரல் கமல் குணரத்னே ஆகியோர் தலைமை வகித்தனர். இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டுப் பயிற்சியின் போது இருநாடுகளும் தங்களது அனுபவங்களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இப்பேச்சுவார்த்தை ஆரோக்கியமான முறையில் நடைபெற்றதற்காக ஜென்ரல் கமல் குணரத்னே மற்றும் அவருடைய பிரதிநிதிகளுக்கு திரு. கிரிதர் அரமானே நன்றி தெரிவித்துக் கொண்டார். பேச்சுகளின்போது மேற்கொள்ளப்பட்ட பொதுவான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இப்பேச்சுக்களை தொடர்ந்து மேற்கொள்ளவும், பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா-இலங்கை ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

(Release ID: 1901757)                    

 

                                 ***

ADA/IR/JJ/KRS

 


(रिलीज़ आईडी: 1901817) आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी